தேர்தல் சட்டத்தை மீறி அரச ஊழியர்கள் செயல்படுவார்களாயின், அவர்களின் பதவி பறிக்கப்படுமென்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. ஏல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சட்டத்தை மீறு வோர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்தல் பிரசாரங்களில் அரச சொத்துகள பயன்படுத்தப்படுகின்றன என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் சட்டத்தை மீற வேண்டாமென வேட்பாளர்களிடம் நான் கேட்டுக்
கொள்கிறேன். சட்டத்தை மீறும் வேட்பாளர் பட்டியலிலிருந்து நீக்கப்படுவார்.
அவ்வாறில்லையெனின், சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டிவரும்.
இதேபோல, அரச ஊழியர்கள் தங்களுக்குரிய கடமையை மாத்திரம்
செய்ய வேண்டும்.
அதனை விடுத்து தாம் ஆதரிக்கும் வேட்பாளரை பிரசாரப்
படுத்தும் நோக்கில் நடவடிக்கைகளில் ஈடுபடுவது சட்டத்தின் பிரகாரம் குற்றமாகும். அவ்வாறு சட்டத்தை மீறும் அரச ஊழியர்களை பதவி நீக்குவதற்கும்
அது காரணமாக அமையும்.
தேர்தல் ஆணைக்குழு தேர்தல் சட்டத்தின் பிரகாரம் கடமைகளை முன்னெடுக்கிறது.
ஏதேனும், விதிமீறல் நடக்கும் பட்சத்தில் வேட்பாளர்களின் தகுதி
தராதரம் பாராது, நடவடிக்கை எடுக்கப்படும் – என்றார்.