வடக்கு மாகாணத்திலுள்ள அரச மருத்துவமனைகளில் இன்று
செவ்வாய்க்கிழமைமதியம் 12 மணி முதல் ஒரு மணி வரை ஒரு மணி நேர அடையாள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் மருத்துவர்கள் ஈடுபடவுள்ளனர் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
கடந்த காலத்தில் அரச மருத்துவமனைகளில் ஏற்பட்ட மருந்து பற்றாக்குறைகளை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தி தரமற்ற மருந்து
கொள்வனவை எதிர்த்து குரல் கொடுத்த அரச மருத்துவ அதிகாரிகள்
சங்கத்தினரின் தலைவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ஒருதலைப்பட்சமான சுயாதீனமற்ற தொழில்நுட்ப அறிவற்ற விசாரணைக்
குழுவின் செயல்பாடுகளுக்கு எதிராகவும் தொழிற்சங்க உரிமைகளை நசுக்கும்
செயல்பாடுகளுக்கு எதிராகவுமே இந்தப் பணிப்புறக்கணிப்பு நடைபெறவுள்ளது
என்றும் தெரிவிக்கப்பட்டது.