நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் காற்று அதிகரித்த வேகத்தில் வீசக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
காங்கேசன்துறை முதல் மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக சிலாபம் வரையான கடற்பிராந்தியங்களிலும் ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களிலும் மணித்தியாலத்துக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும்.
சிலாபம் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியங்களிலும் திருகோணமலை முதல் காங்கேசன்துறை வரையான கடற்பிராந்தியங்களிலும் மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக் கூடிய சாத்தியம் நிலவும்.
அதேநரம் காங்கேசன்துறை முதல் மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக சிலாபம் வரையான கடற்பிராந்தியங்களிலும் ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களிலும் கடல் கொந்தளிப்பாகக் காணப்படுமெனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.