நாட்டின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 3.5 சதவீதமாக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இது, நெருக்கடியின் விளைவுகள், வளர்ச்சிக்கான கட்டமைப்பு தடைகள் மற்றும் அதிகரித்த உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளை பிரதிபலிக்கிறது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், 2026, 2027 ஆம் ஆண்டுகளிலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேலும் 3.1 சதவீதமாக குறைவடையலாம். 2024 ஆம் ஆண்டில் எதிர்பாராத விதமாக 6 சதவீத வளர்ச்சி ஏற்பட்டிருந்தது.
எனினும், அதிகரித்து வரும் உலகளாவிய வர்த்தகத் தடைகள், நிதிச்சந்தை ஏற்ற இறக்கம் ஆகியவற்றுக்கு மத்தியில் தெற்காசியாவில் செயல்பாடு குறைந்து வருவதே பொருளாதார வீழ்ச்சிக்கான காரணம். முன்னதாக, 2025, 2026 ஆம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக் கும் என்று கணிப்பிடப்பட்டிருந்தது.
எனினும், கடந்த ஜனவரி மாத கணிப்புகளுடன் ஒப்பிடும்போது, இந்த முன்னறிவிப்பு 0.4 சதவீத புள்ளிகளால் குறைவாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.