எமது ஆட்சியில் இராணுவத்தினரை பாதுகாப்போம் – நாமல்!

எமது ஆட்சியில் இராணுவத்தினரை பாதுகாப்போம் - நாமல்!

editor 2

தமிழர்களை பாதுகாத்த இராணுவத்தினர் மீது யுத்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. எமது ஆட்சியில் இராணுவத்தினரை பாதுகாப்போம் என்று சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குருநாகலில் நேற்று நடந்த கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு
கூறினார்.

மகாநாயக்கர்களையும் பௌத்த கலாசாரத்தையும் திட்டமிட்ட வகையில் விமர்சிக்கும் செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது.
இதனை அலட்சியப்படுத்த முடியாது.

பிறிதொரு தரப்பினர் இராணுவத்தையும் கேலிக்கூத் தாக்கினார்கள். விடுதலைப் புலிகளிடம் இருந்து நாட்டை பாதுகாத்த இராணுவத்தினர் குற்றவாளிகளாக்கப்பட்டார்கள். சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லும் செயல்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.

உலக நாடுகளில் தற்போது இடம் பெறும் போரால் சிவில் பிரஜைகள்
கொல்லப்படுகிறார்கள். இதனைப் பற்றி எந்த நாடும் பேசுவதில்லை. நாங்கள்
மனிதாபிமான கண்காணிப்புகளை முன்னெடுத்தோம். தமிழர்களை பாது
காத்த இராணுவத்தினர்மீது போர் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

எமது அரசாங்கத்தில் இராணுவத்தினரின் கௌரவத்தை பாதுகாப்போம்.
இராணுவத்தினர் இந்த நாட்டுக்கு செய்த சேவையை நாங்கள் நன்கு அறி வோம்.
ஆகவே, அவர்களுக்கான புதிய நலன்புரி திட்டங்களை முன்னெடுப்போம் – என்றார்.

Share This Article