400 வருடங்கள் பழமை வாய்ந்த சிவன் ஆலயத்தை அதன் வடிவம் மாறாமல் மீளுருவாக்கும் பணி சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டை – துணவியில் அழிவடைந்த நிலையில் காணப்படும் பிரகேதீஸ்வரர் ஆலயமே இவ்வாறு மீளுருவாக்கப்படவுள்ளது.
மீளுருவாக்க ஆரம்பப் பணி யாழ்ப்பாண மரபுரிமைமையத்தின் தலைவர் வாழ்நாள் பேராசிரியர் புஸ்பரட்ணம் தலைமையில் நேற்று முன்தினம்
வியாழக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.
அழிவடைந்த நிலையில் காணப்படும் இந்த ஆலயத்தின் ஏனைய பாகங்கள் அத்திபாரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆலயம் மீளுருவாக்கப்படவுள்ளது.
இந்த ஆலயம் கர்ப்பக்கிரகம், அந்தராளம், முன்மண்டபம், துணைக்கோயில்கள், சுற்றுமதில் மடங்கள், கேணி என்பவற்றை கொண்டிருந்ததாகக் கருதப்படுகின்றது.
இந்த ஆலயத்தை மீளுருவாக்கும் நிதியை தற்போது அமெரிக்காவில் வசிக்கும் சிவயுகநானத் பாலயோகஸ்தினி என்பவர் வழங்கியுள்ளார் என்பது
குறிப்பிடத்தக்கது.