ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒவ்வொரு வாக்காளருக்காகவும் செலவிடக்கூடிய அதிகபட்ச தொகையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கவினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) இரவு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் ஒரு வாக்காளருக்கு செலவழிக்கக்கூடிய அதிகபட்ச தொகை 109.00 ரூபாவென அந்த வர்த்தமானியில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வர்த்தமானியின் படி, ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரின் மொத்த செலவினமாக 186 கோடியே 82 இலட்சத்து 98 ஆயிரத்து 500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.