இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் சபையை கூட்டி யாப்பின்படி மீண்டும் தலைவர், செயலாளர் தெரிவுகளை நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் பேச்சாளர் எம். ஏ.சுமந்திரன் எம். பி. தெரிவித்துள்ளார்.
தைரியமாக விலகி தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்புடன் இணைய
வேண்டும். விலகி வருபவர்களுக்கு மக்கள் அரணாக இருப்பார்கள்.
தமிழ்க் கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டும் என்றே தமிழ் மக்கள் விரும்புகிறார்கள். இலங்கை தமிழ் அரசுக்கட்சியினர் தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பில் இணைவதன் மூலம் ஒரு குடையின் கீழ் நாம் நிற்க முடியும்.
எம்மைப் பிரித்தாளும் தந்திரத்தை தென்னிலங்கை செய்கிறது. நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
தமிழ்ப் பொது வேட்பாளர் குறைந்தது 5 இலட்சம் வாக்குகளை யாவது பெறவேண்டும். அப்போதுதான் நாம் தலைநிமிர்ந்துநிற்க முடியும். சர்வதே
சத்துக்கும் சில விடயங்களை சொல்ல முடியும் – என்றார்.