பொலிஸ் மாஅதிபர் விவகாரம் குறித்து பிரதம நீதியரசருடன் உரையாடப் போவதில்லை என்று சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
ஏனெனில், பிரதம நீதியரசருடன் கலந்துரையாடுவது என்பது சட்ட வரம்புக்கு அப்பால்பட்டது என்றும் சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.
தேசபந்து தென்னக்கோன் பொலிஸ்மா அதிபராக செயல்படுவதற்கு தடை விதித்து கடந்த 24ஆம் திகதி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதைத் தொடர்ந்து, பொலிஸ் மா அதிபர் தொடர்பான பிரச்னைக்கு பிரதம நீதியரசரும் சபாநாயகரும் கலந்துரையாடி தீர்வு காணவேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.
இந்த நிலையிலேயே மேற் கண்டவாறு சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.