கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் ஜனாதிபதியால் தாளையடியில் திறக்கப்பட்டது!

கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் ஜனாதிபதியால் தாளையடியில் திறக்கப்பட்டது!

editor 2

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 266 மில்லியன் ரூபா திட்டத்தில் தாளையடியில்
அமைக்கப்பட்ட கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரம
சிங்க நேற்று திறந்துவைத்தார்.

நேற்று காலை 10:30 மணியளவில் உள்ள சுபவேளையில் இந்த திறப்பு
விழா இடம்பெற்றது.

பெருந்தொட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ், நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சுச் செயலாலார் ஏ.ஸீ.ஏ. நபீல், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆ.சித்தார்த்தன், அங்கஜன் இராமநாதன் அமைச்சர் காதர் மஸ்தான், ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரட்நாயக்க, வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி வந்தன விக்கிரம சிங்க, ஆசிய அபிவிருத்தி வங்கி பிரதி நிதி சக்காவா, தேசிய நீர்வழங்கல் வடிகால மைப்புச் சபை தலைவர், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், நிறுவனத் தலைவர்கள், திணைக்களத்
தலை வர்கள், உட்பட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

குறித்த கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு வடமராட்சி கிழக்கு மீனவ மக்களின் பல்வேறு எதிர்ப்புக்களுக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் பல தாமதங்களுக்கு மத்தியில் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

இதனூடாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி நீர்வழங்கல் வடிகாலமைப்பு பிரிவுக்குட்பட்ட 3 இலட்சம் மக்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article