ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஒன்று நாளைய தினம் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர் மற்றும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடு என்பன குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது.
எவ்வாறாயினும் கடந்த வியாழக்கிழமை குறித்த இருவருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவடைந்திருந்ததாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க, கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், சுயேச்சையாகப் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்குமாறு கோரி கொழும்பு – விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ளதாகவும், இதன்போது இது தொடர்பான இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.