எல்லைத் தாண்டி சட்டவிரோத மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 7 பேரை இராமநாதபுரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
குறித்த 7 இலங்கை மீனவர்களும் கடந்த 18 ஆம் திகதி இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மீனவர்களின் வழக்கு தொடர்ந்தும் நடைபெற்று வந்த நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த 7 இலங்கை மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு மத்திய அரசு கோரியதன் அடிப்படையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் ஏழு பேரும் சில தினங்களில் நாடு திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.