யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த தாயையும் மகளையும் வாகனம் மோதியதில் தாயார் உயிரிழந்தார்.
மகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மானிப்பாய் – கட்டுடை சந்தியில் நேற்று மாலை 6.30 மணியளவில் இந்த விபத்து
இடம்பெற்றுள்ளது.
இதில், 46 வயது பெண் ஒருவரே உயிரிழந்தார். அவரின் மகள் காயமடைந்து தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளை மோதிய வாகனத்தை செலுத்தியவரும் அதில் பயணித்தவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.