யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பில் வீடொன்றில் உயிரிழந்த ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டது.
பண்டத்தரிப்பு – செட்டிக்குறிச்சியை சேர்ந்த 74 வயது நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
அவரின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து அயலவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது, வீட்டின் முன்பகுதியில் சடலம் காணப்பட்டது.
இதையடுத்து, இளவாலை பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவ மனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.