யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று மூதூர் பகுதியில் விபத்துக்குள்ளானது.
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் கங்கை பாலத்துக்கு அருகில் கீழே விழுந்து இந்த பேருந்து விபத்துக்குள்ளானது.
இதில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகச் சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் சூரியன் செய்திகளுக்குத் தெரிவித்திருந்தனர்.
எனினும் பிந்திக் கிடைத்த தகவல்களின்படி 51 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் மூதூர் தள வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.