தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக லண்டனிலிருந்து வருகை தந்த யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக் கொண்ட மகன் நேற்று (18) கடுமையான மனவேதனையின் காரணமாக மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் காரைநகர் மணற்காடு பகுதியைச் சேர்ந்த 31 வயது பிரகாஸ் என்பவர் நான்கு வருடங்களுக்கு முன்னர் லண்டன் சென்றிருந்த நிலையில், தந்தையின் மரணம் காரணமாக யாழ்ப்பாணம் வந்துள்ளார்.
இறுதிச் சடங்கில் திடீரென மயங்கி கீழே விழுந்து காரைநகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் அவரது மரணத்திற்கு மாரடைப்பு தான் காரணமெனவும் ஒரே நேரத்தில் இரண்டு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் வைத்தியர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் காரைநகர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.