ஜனாதிபதித் தேர்தலுக்காக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் செலவினங்களுக்காக தேவைப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிதியை விடுவிக்க இயலும் என்று நிதி அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, எதிர்வரும் 17ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வருகைதருமாறு நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரின் அறிவுறுத்தலுக்கமைய இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
ஜனாதிபதி தேர்தலுக்கான நிதியை விடுவித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடத் திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.