இஸ்ரேலில் பணியாற்றிவரும் இலங்கையர் ஒருவர் ஏவுகணைத் தாக்குதலில் காயமடைந்துள்ளார்.
இந்தத் தகவலை இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார உறுதிப்படுத்தினார்.
காயமடைந்தவர் வடக்கு இஸ்ரேலின் லெபனான் எல்லைக்கு அருகில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த இலங்கையராவார்.
ஏவுணையின் இரும்புத் துண்டு ஒன்று தலையில் தாக்கியதில் குறித்த நபர் காயமடைந்தார். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டது.