காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினருடன் தாம் உடன் நிற்பதாக அமெரிக்க தூதரகம் தெரிவிப்பு!

காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினருடன் தாம் உடன் நிற்பதாக அமெரிக்க தூதரகம் தெரிவிப்பு!

Editor 1

இன்னமும் பதிலுக்காகக் காத்திருக்கும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினருடன் தாம் உடன் நிற்பதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியை அகழும் மூன்றாம் கட்ட பணிகளை அமெரிக்க தூதரகத்தின் அரசியல் பிரிவு அதிகாரி மத்தியூ ஹின்ஸன் நேரடியாக பார்வையிட்டதன் பின்னரே தூதரகம் இப்படித் தெரிவித்துள்ளது.

அமெரிக்க தூதரக அதிகாரி கடந்த வெள்ளிக்கிழமை மனிதப் புதைகுழி அகழ்வை நேரில் பார்வையிட்டார்.

இது தொடர்பாக அமெரிக்க தூதரகம் தனது எக்ஸ் தளத்தில்,

‘இலங்கையில் பல தசாப்தகாலமாக இடம்பெற்ற சிவில் யுத்தத்தின் போது வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினருடனான எமது உடன் நிற்பை வெளிப்படுத்தும் வகையில், காணாமல்போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகளுடன் எமது தூதரக அதிகாரி கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளைப் பார்வையிட்டார் – என்றும், ‘இன்னமும் பதிலுக்காகக் காத்திருப்போருக்கான உண்மை, ஆறுதல் மற்றும் வெளிப்படைத்தன்மையை நோக்கிய இந்த முக்கிய நகர்வைத் தாம் பெரிதும் வரவேற்பதாகவும்
அது குறிப்பிட்டுள்ளது.

Share This Article