தொடருந்து துறை ஊழியர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது!

தொடருந்து துறை ஊழியர்கள போராட்டம் முடிவுக்கு வந்தது!

Editor 1

‘பணிப்புறக்கணிப்பில் என்று குறிப்பிட்டு அரசாங்கம் உத்தியோகபூர்வ கடிதம் அனுப்பியமையைத் தொடர்ந்துத் துறையினரின் போராட்டம் நேற்றிரவு நிறைவுக்கு வந்தது.

சம்பள உயர்வு கோரிக்கையை முன்வைத்து தொடருந்து நிலைய அதிபர்கள், நேரக் கட்டுப்பாட்டாளர்கள் பணிப்புறக்கணிப்பில் அரசாங்கத்துக்கு சுமார் 10 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், ‘பணிப்புறக்கணிப்பில் புகையிரத கட்டுப்பாட்டாளர்கள், நிலைய அதிபர்கள் சங்கத்தின் அதிகாரிகள் முன்னாள் சபாநாயகர் கருஜயசூரியவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்கும் புகையிரத கட்டுப்பாட்டாளர்கள், நிலைய அதிபர் கள் தொழில்சங்கங்களுக்கும் இடையே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இதற்கமைய, நேற்றைய தினத் துக்குள் அதாவது நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் பணிக்கு சமுகமளிக்கும் உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படாது என்று அமைச்சர் உறுதியளித்தார்.

இதைத் தொடர்ந்து, தொடருந்து நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் உடன் முடிவுக்கு வருவதாக நேற்றிரவு தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் அறிவித்தார்.

இதையடுத்து தொடருந்து சேவைகள் வழமைக்கு திரும்பின.

Share This Article