போராட்டத்தைப் புறக்கணித்த ஆசிரியர்களுக்கு சம்பள அதிகரிப்பு!

போராட்டத்தைப் புறக்கணித்த ஆசிரியர்களுக்கு சம்பள அதிகரிப்பு!

Editor 1

ஜூலை 8 மற்றும் 9ஆம் திகதிகளில் பணிக்கு சமுகமளித்த ஆசிரியர்களுக்கு விசேட வேதன அதிகரிப்பை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

இந்தத் தகவலை அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். 

அவர்களின் பதவி உயர்வுகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் பரிசீலிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதற்கமைய 3ஆம் தர ஆசிரியர் ஒருவருக்கு 525 ரூபாவும், 2ஆம் தர ஆசிரியருக்கு 1,335 ரூபாவும், முதலாம் தர ஆசிரியருக்கு 1,630 ரூபா வேதன அதிகரிப்பை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Share This Article