தற்போதுள்ள வரவு – செலவுத்திட்டத்தின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் ஊடாக இந்த வருடம் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பை வழங்க முடியாதென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போது பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அரச சேவை தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில்
நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இந்த விடயத்தைக் குறிப்
பிட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அரச சேவையில் நிலவும் வேதன முரண்பாடு தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகளைக் கருத்திற் கொண்டு அடுத்த வருடத்திற்கான வரவு – செலவுத்திட்டத்தில் அரச ஊழியர்களின் வேதனம் குறித்து மீளாய்வு செய்ய எதிர்பார்க்கப் படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.