கொழும்புக்கு அழைக்கப்பட்டார் வைத்தியர் அர்ச்சுனா!

கொழும்புக்கு அழைக்கப்பட்டார் வைத்தியர் அர்ச்சுனா!

editor 2

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா வைத்தியசாலை விடுதியில் இருந்து வெளியேறினார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகரை, சாவகச்சேரி வைத்தியசாலையில் இருந்து இடமாற்றும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வைத்தியசாலை முன்பாக நேற்றிரவு (07) ஆரம்பித்த கண்டன ஆர்ப்பாட்டம் அதிகளவிலான மக்களின் பங்கேற்புடன் தொடர்ச்சியாக இன்றும் (08) முன்னெடுக்கப்பட்டது. 

இந்நிலையில் இன்று வைத்திய அத்தியட்சகர் வெளியேறிச் சென்றதையடுத்து வைத்தியசாலை முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டமும் நிறைவுக்கு வந்தது. 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோருடன் கலந்துரையாடிய வைத்தியர் அர்ச்சுனா, தானே தற்போதும் வைத்திய அத்தியட்சகர் எனவும் தற்போது சுகவீன விடுமுறையில் இருப்பதாகவும், குறித்த நிலைமை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கொழும்புக்குச் செல்வதாகவும் தெரிவித்து விட்டு வெளியேறினார்.

Share This Article