பிரதான வீதியை அகற்றி கொக்குத்தொடுவாயில் அகழ்வு தொடர்கிறது!

பிரதான வீதியை அகற்றி கொக்குத்தொடுவாயில் அகழ்வு தொடர்கிறது!

editor 2

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி காணப்படும் பிரதான வீதியை அகழும் பணி நேற்று ஆரம்பமானது.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிநேற்று வெள்ளிக்கிழமை இரண்டாம் நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, மனித புதைகுழி காணப்படும் பிரதான வீதியின் மேல்படை நேற்று அகழப்பட்டது.

அத்துடன், தோண்டப்பட்ட பகுதியை மழை பாதிக்காதிருக்க கொட்டகையும் அமைக்கப்பட்டது. இந்த அகழ்வுப் பணியை 10 நாட்கள் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னதாக, இரு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் 40 எலும்புக்கூடுகள், துப்பாக்கிச்சன்னங்கள், விடுதலைப் புலிகளின் போராளிகளுக்கு சொந்தமான இலக்கத்தகடுகள் மற்றும் உடைகள் மீட்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article