அரசமைப்பு விதிகளின்படி ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என்பதோடு 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்தவுள்ள தேர்தல் ஆணைக்குழுவின் தீர்மானம் சரியானது என்பதே எனது நிலைப்பாடு என்று ஜனாதிபதி ரணில்
விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் நேற்றுமுன்தினம் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த மனு குறித்து விளக்க மளிக்கையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்வதற்கு முன்னர் சமிந்திரதயான் லெனவ என்பவர் என்னிடமோ அல்லது
எனது சட்டத் தரணிகளுடனோ அது தொடர்பில் கலந்தாலோசிக்கவோ – ஆலோ
சனை பெறவோ இல்லை – என்றும் ஜனாதிபதி கூறினார்.
இதேவேளை, ஜனாதி பதித்தேர்தல் திகதியை நீதிமன்றம் விளக்கமளிக்கும் வரை தற்போதைய திட்டமிட்டபடி ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி வர்த்தகரான தயான் லெனவ நேற்று முன் தினம் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை சமர்ப்பித்திருந்தார்.