சர்வதேச பங்களிப்பை எட்டும் நோக்கில் பொது வேட்பாளரை நிறுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம்!

சர்வதேச பங்களிப்பை எட்டும் நோக்கில் பொது வேட்பாளரை நிறுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம்!

editor 2

தமிழ் மக்களின் அபிலாசைகளுடனான அரசியல் தீர்வை சர்வதேச சமூகத்தின் ஆரோக்கியமான – ஆக்கபூர்வமான பங்களிப்புடன் எட்டும் நோக்கத்தோடும் – தமிழ் மக்களின் தனித்துவம், வரலாற்று ரீதியான வாழ்விடத்தை உறுதிப்படுத்தும் விதத்திலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது என்று ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) பங்காளி கட்சிகள் ஒருமனதாக தீர்மானித்துள்ளன.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நேற்று வவுனியாவில் தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. அத்துடன், தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதற்காக முன்னின்று செயல்படும் சமூக அமைப்புகளுடன் எதிர்வரும் 29ஆம் திகதி ஜன நாயக தமிழ்த் தேசியக் கூட்டணி கலந்துரையாடவுள்ளது.

இதன்போது, என்ன பொறிமுறை அடிப்படையில் பொது வேட்பாளரை நிறுத்துவது என்பது தொடர்பிலும், பொது வேட்பாளர் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக் கைகளை முன்னெடுக்ககுழு ஒன்றை அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று தெரிய வருகின்றது.

இந்தக் கூட்டத்தில் ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தம் கருணாகரம் (ஜனா), சுரேந்திரன் குருசுவாமி, தமிழ்த் தேசியக் கட்சியின் சார்பில் நா. சிறீகாந்தா, ஜனார்த்தனன், ஈ. பி. ஆர். எல். எவ். கட்சியின் சார்பில் அந்தக்கட்சியின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன், செயலாளர் சிவசக்தி ஆனந்தன், புளொட் கட்சியின் சார்பில் வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் ச. சிவநேசன், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் செயலாளர் நா. ரட்ணலிங்கம், ஜனநாயக போராளிகள் கட்சியின் சார்பில் அந்தக் கட்சியின் தலைவர் வேந்தன், பேச்சாளர் துளசி ஆகியோர் பங்கேற்றனர

Share This Article