2024ஆம் ஆண்டில் இந்திய மீனவர்கள் 182 பேர் இலங்கை கடற்பரப்பில் கைது!

Editor 1

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதிக்குள் இந்திய மீனவர்கள் 182 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்களிடமிருந்து 24 மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இன்று (18) செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 04 பேர் மீன் பிடி படகுடன் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share This Article