கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் நேற்று பிற்பகல் 01 மணிக்கு பின்னர் இடைநிறுத்தப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சாதாரண தர பரீட்சை விடைத்தாள் களை திருத்தும் பணிகள் முன்னெடுக்கப்படும் 101 மத்திய நிலையங்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள 100 வலய கல்வி அலுவலகங்கள் ஆகியவற்றிற்கு முன்பாக நேற்று பிற்பகல் 01 மணிக்கு அதிபர் – ஆசிரியர் போராட்டம் பாரியளவில் நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் – ஆசிரியர் சம்பள முரண்பாட்டை நீக்குதல், கல்வி சுமையை பெற்றோர் மீது சுமத்துவதை உடனடியாக நிறுத்துதல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே இந்த போராட்டம் நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.