அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் மூன்று கட்டங்களின் கீழ் தீர்வை வரிக்கொள்கை ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஒவ்வொரு அரசாங்கங்களினாலும் காலத்திற்கு காலம் அறிமுகப்படுத்தப் பட்டு வரும் பல்வேறு கொள்கைகளுக்கு ஏற்ப தீர்வை வரிக் கொள்கை திருத்தியமைக்கப்படுவதால் நாட்டில் முதலீடுகளின் போட்டித்தன்மைக்கு பாதகமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதன்படி, தேசிய தீர்வை வரிக் கொள்கை யொன்றை தயாரிப்பதற்கு ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் தொழில்நுட்பக் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
இந்த குழுவினர் வர்த்தக மற்றும் தொழில்துறையினருடன் கலந்துரையாடி
இந்த தீர்வை வரிக் கொள்கையை தயாரித்துள்ளனர்.