வடக்கில் எந்தவித அபிவிருத்தியும் இல்லை – சஜித்!

வடக்கில் எந்தவித அபிவிருத்தியும் இல்லை - சஜித்!

Editor 1

நாட்டில் யுத்தம் நிறைவடைந்து பதினைந்து வருடங்கள் கடந்துள்ள போதும் வட மாகாணத்தில் எவ்வித  அபிவிருத்திகளும் இடம்பெறவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின்  கீழ் மானிப்பாய் புனித. ஹென்றியரசர் கல்லூரிக்கு ஸ்மார்ட் வகுப்பறைக்கான உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” வட மாகாணத்திலுள்ள மக்களை மையப்படுத்திய பாரிய அபிவிருத்தியொன்று மேற்கொள்ளப்பட வேண்டும். இங்கு அபிவிருந்திகள் இடம்பெறவில்லை என்பதை அவதானிக்க முடிகின்றது.

எனவே நாம் இங்கு அபிவிருத்திக்கு முன்னுரிமை வழங்கவுள்ளோம். தமிழ் மக்களை முன்னிலைப்படுத்திய, பங்கேற்பு அபிவிருத்தியின் ஒரு வடிவமாக அதனை நாம் முன்னெடுக்கவுள்ளோம்.

இதன் மூலம் வடக்கிலிலுள்ள கிராமங்களை கட்டியெழுப்ப முடியும். கிராமங்களை  முன்னேற்றுவதனால் நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு
மிகப்பெரிய பக்கபலம் கிடைக்கும்.

இதற்கு அறிவு சார்ந்த பொருளாதாரம், ஏற்றுமதி அடிப்படையிலான பொருளாதார வளர்ச்சியை நோக்கி நகர வேண்டும். தகவல் தொழில்நுட்பக் கல்வியை மேம்படுத்த தேசிய வேலைத்திட்டமொன்றின் தேவைப்பாடு இன்று எழுந்துள்ளது.

யாழ்.மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் கைத்தொழில் பூங்காக்களை அமைத்து, அபிவிருத்தியை நடைமுறை ரீதியாக முன்னெடுப்போம். இதுவே ஐக்கிய மக்கள் சக்தியின் கனவாகும்” இவ்வாறு சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மேலும், பெயரளவில் இருந்த சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான சட்டம் தற்போது நிலையான நிலையை எட்டியுள்ளது. எனவே, நாட்டின் அனைத்து பிரஜைகளும் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கைகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் சொத்து பொறுப்பு அறிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்கிறார்கள். மேலும், வழக்குப் பொருட்கள் மற்றும் போதைப்பொருட்களை அகற்றுவது தொடர்பாக புதிய சட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

மேலும், குற்றச் செயல்கள் மூலம் பெறப்பட்ட சொத்துக்கள் குறித்து விசாரிக்க அதிகார சபையொன்று அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், முதன்மை வழக்கு நடவடிக்கை சட்டத்திற்குத் திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. திருமணம் தொடர்பான புதிய சட்டமூலமும் முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும், முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் தொடர்பாக பொதுவாக ஏற்றுக்கொள்ளக்கூடிய மாற்றங்களை மாத்திரம் முன்வைத்து அந்த சட்டமூலத்தை திருத்த அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

மேலும், தற்போது காதி நீதிமன்றம் தொடர்பாக பல பிரச்சினைகள் எழுந்துள்ளன. அதன்படி, இரண்டு மாற்றங்களைச் செய்ய முன்மொழியப்பட்டுள்ளது. அதேபோன்று, வெளிநாட்டு நீதிமன்ற தீர்ப்புகளை கையாளும் வெளிநாட்டு நீதிமன்ற தீர்ப்புகளை செயல்படுத்துவதற்கான வரைவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த சில வாரங்களில் சுமார் 15 மிக முக்கியமான சட்டங்களை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. குற்றவியல் நடைமுறைச் சட்டத்திலும் பல திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மேலும், அண்மையில் நிறைவேற்றப்பட்ட நீரியல் சட்டத்தை அடுத்த ஆண்டு அமுல்படுத்தலாம். இதன்மூலம் இந்நாட்டின் கடல் எல்லைகள் வழியாக பயணிக்கும் கப்பல்கள் மூலம் 50 மில்லியன் டொலர்களுக்கு மேல் வருமானத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.” என அவர் மேலும் தெரிவித்தார்.

Share This Article