வடக்கின் மன்னார்தீவு உள்ளிட்ட பல இடங்களில் ஆளில்லா விமானக் கமெராக்களை பயன்படுத்தி படமெடுப்பதற்கு இந்தியா அனுமதி கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய தூதரகத்தினால் இலங்கை அரசாங்கத்துக்கு அனுப்பப்பட்ட கோரிக்கை கடிதம் தற்போது பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
மன்னாரின் மணல் திட்டுகள், இராட்சத மரங்கள் மற்றும் நெடுந்தீவு உள்ளிட்ட எட்டு
பிரபலமான இடங்களில் ஆளில்லா விமானக் கமெராக்களை பயன்படுத்தி படமெடுக்க அனுமதி கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு படமாக்கும் காட்சிகள் இலங்கைக்கு யோகாவை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சிக்கு பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சை தொடர்புகொண்டு கேட்டபோது,
குறித்த விடயம் தொடர்பில் மேலதிக விடயங்களை ஆராய்ந்த பின்னரே பதிலளிக்க முடியும்என பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.