ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலுக்கு (ECOSOC) இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (7) நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையிலேயே இத்தெரிவு இடம்பெற்றுள்ளது.
189 உறுப்பு நாடுகளில் 182 வாக்குகளைப் பெற்று, 2025 ஜனவரி 1 முதல் மூன்று வருட காலத்துக்கு இலங்கையானது ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
பிராந்திய நாடொன்றுக்கு கிடைத்த இரண்டாவது அதிக வாக்குகளை பெற்றே இலங்கை தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.