யாழ்.மாவட்டத்தில் உயர்தரப் பெறுபேறுகளில் முன்னிலை பெற்றுள்ள பாடசாலைகள் சிலவற்றின் விபரம் வெளியாகியது!

யாழ்.மாவட்டத்தில் உயர்தரப் பெறுபேறுகளில் முன்னிலை பெற்றுள்ள பாடசாலைகள் சிலவற்றின் விபரம் வெளியாகியது!

Editor 1

க.பொ. த. உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் மாணவர்கள் 56 பேரும், வேம்படி மகளிர் கல்லூரியில் மாணவிகள் 30 பேரும் பருத்தித் துறை ஹாட்லி கல்லூரியில் மாணவர்கள் 21 பேரும் 3ஏ பெறுபேற்றை பெற்றுள்ளனர்.

2023ஆம் ஆண்டுக்கான க. பொ. த. உயர்தர பரீட்சை கடந்த ஜனவரி 4ஆம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரை நடை பெற்றது. இந்தப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று வெளியாகின.

இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முன்னணி பாடசாலைகள் சில பெற்றுக்கொண்ட பெறுபேறுகளின் விபரங்கள் வருமாறு,

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் மாணவர்கள் 56 பேர், 3ஏ சித்தியைப் பெற்றனர். இதில் பௌதிக விஞ்ஞான (கணிதம்) பிரிவில் மாணவர்கள் 26 பேரும் உயிரியல் விஞ்ஞான பிரிவில் மாணவர்கள் 23 பேரும்
கலைப் பிரிவில் மாணவர்கள் ஐவரும், வணிகவியல் பிரிவில் மாணவர்கள் இருவரும் அடங்குவர்.

பருத்தித்துறை ஹாட்லி

பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியில் மாணவர்கள் 21 பேர் 3ஏ சித்தியை பெற்றனர். இதில், பௌதிக விஞ்ஞான (கணிதம்) பிரிவில் மாணவர்கள் 13 பேரும் உயிரியல்
விஞ்ஞான பிரிவில் மாணவர்கள் நால்வரும் பொறியியல் தொழில்நுட்ப பிரிவில்
ஒரு மாணவனும், உயிரியல் தொழில் நுட்பத்தில் 2 மாணவர்களும் வணிகவியலில் மாணவர் ஒருவரும் அடங்குவர்.

பருத்தித்துறை மெதடிஸ்

பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலையில் மாணவிகள் ஒன்பது பேர் 3ஏ சித்தி பெற்றனர். இதில், பௌதிக விஞ்ஞான (கணிதம்) பிரிவில் மாணவிகள் மூவரும் உயிரியல் விஞ்ஞான பிரிவில் மாணவிகள் மூவரும் கலைப் பிரிவில் மாணவிகள் மூவரும் உள்ளடங்குவர்.

உடுப்பிட்டி அமெரிக்க மிசன்

உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் பாடசாலையில் கணிதப் பிரிவில் 6 பேர் 3ஏ சித்தி பெற்றனர்.

யாழ். மத்திய கல்லூரி

யாழ். மத்திய கல்லூரியில் முதல்கட்டமாக கிடைத்த தகவலின் அடிப்படை
யில் 3 பேர் 3ஏ சித்தி பெற்றனர். இதில்,பௌதிக விஞ்ஞான (கணிதம்) பிரிவில்
2 மாணவர்களும் உயிரியல் விஞ்ஞான பிரிவில் ஒரு மாணவரும் அடங்குவர்.

இதேநேரம், யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலையில் 30
மாணவியர் 30 பேர் 3ஏ பெறுபேற்றை பெற்றுக் கொண்டனர்.

Share This Article