புலம்பெயர் தமிழர்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலை பின்பற்றுவதை தவிர்க்க வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கைக்கு எதிரான மனித உரிமைகள் குற்றச்சாட்டுகள், நல்லிணக்க முயற்சிகள் குறித்து இதன் போது கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் குடிமக்களின் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான நாட்டின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தினார்.
தங்கள் அன்புக்குரியவர்கள் காணாமல் போயுள்ளனர் என்று 6,700 பேரின் வேதனை மிகுந்த குற்றச்சாட்டுகளை ஏற்பதாகவும் நல்லிணக்கத்துக்கு
ஏற்ற பொருத்தமான சூழ்நிலையை ஏற்படுத்தவேண்டியது அவசியம். அத்துடன், வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு அவசியம் என்றும் அவர் கூறினார்.