2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வெளியாகின.
உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய பரீட்சாத்திகள் 269,613 பேரில் 173,444 பேர் (64.33%) பல்கலைக்கழக அனுமதிக்கு தகைமையுடையவர்கள் என அறிவிக்கப்பட்டது.
அத்துடன், பரீட்சைக்குத் தோற்றியவர்களில் 190 பேரின் பரீட்சைப் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
146 பாடசாலை பரீட்சாத்திகள், 44 தனியார் பரீட்சாத்திகளின் பெறுபேறுகளே இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.