ஐ. எஸ். அமைப்பினர் என்ற குற்றச்சாட்டில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இந்திய பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் இலங்கை வரவுள்ளனர்.
குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் அண்மையில் இலங்கையை சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ். ஐ. எஸ்ஸை சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரியவந்தது. இதை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்ட விசாரணையில் இலங்கையில்
மூவர் கைது செய்யப்பட்டனர்.
எனினும், கைதான ஐ.எஸ். அமைப்பினரை இயக்கினார் என்று கூறப்படும் பிரதான சந்தேக நபரான ஒஸ்மண்ட் ஜெராட் என்பவர் தலைமறைவாகியுள்ளார்.
இந்த நிலையிலேயே இந்தியாவின் குஜராத் மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் இலங்கை வரவுள்ளனர்.
இதேநேரம், ஜெராட்டை தேடப்படும் குற்றவாளியாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.