தேர்தல்களை ஒத்திவைப்பது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானதல்ல என்று சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதினதும் நாடாளுமன்றத்தினதும் காலத்தை நீடிப்பது ஜனநாயக சமூகத்தின் அடிப்படை கொள்கையைபாதிக்கும்.
மக்களின் விருப்பத்துக்கு அமைய ஸ்திரதன்மை ஏற்படுத்தப்பட வேண்டுமே தவிர, மக்களின் குரல்களை தாமதப்படுத்தி ஏற்படுத்தக்கூடாது – என்று அவர் தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.