புலமைப் பரிசில் பரீட்சை; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

Editor 1

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரை இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இது தொடர்பில் சிக்கல்கள் இருப்பின், பரீட்சை திணைக்களத்தின் அவசர இலக்கமான 1911 அல்லது 011-2 784537, 0112 786616, 0112 784208 ஆகிய இலக்கங்களுக்கு அழைப்பதன் மூலம் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

மேலும் இந்த ஆண்டு, 5ஆம் தரம் புலமைப்பரிசில் பரீட்சை செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Article