சீரற்ற காலநிலையால் 35 ஆயிரம் பேருக்கு பாதிப்பு!

சீரற்ற காலநிலையால் 35 ஆயிரம் பேருக்கு பாதிப்பு!

Editor 1

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 9 ஆயிரத்து 616 குடும்பங்களை சேர்ந்த 34 ஆயிரத்து 880 பேர்பாதிக்கப்பட்டுள்ளனர். இதேநேரம் 6 மரணங்கள் சம்பவித்துள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

அத்துடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்று அவர் நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே இந்தத் தகவல்களைத தெரிவித்தார்.

மேலும், கடந்த 19ஆம் திகதி முதல் கனமழை ஆரம்பித்தது. இதனால் 18 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், 9 ஆயிரத்து 616 குடும்பங்களை சேர்ந்த 34 ஆயிரத்து 880 பேர் பாதிக்கப்பட்டனர்.

மரம் சரிந்து விழுந்ததால் 6 மரணங்கள் இடம்பெற்றுள்ளன. 11 பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளை 3 வீடுகள் முற்றாக சேதமடைந்தன. ஆயிரத்து 246 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தன.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கும் உதவி தொகைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் கூறினார்.

Share This Article