30 ஆம் திகதிக்குள் வாக்குச்சீட்டுக்களை அச்சிடத் தீர்மானம்!

30 ஆம் திகதிக்குள் வாக்குச்சீட்டுக்களை அச்சிடத் தீர்மானம்!

Editor 1

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அனைத்து வாக்குச் சீட்டுகளையும் எதிர்வரும் 30 ஆம் திகதிக்குள் அச்சிட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிப்பதற்கு எதிர்பார்ப்பதாக அரச அச்சக மா அதிபர் பிரதீப் புஷ்பகுமார தெரிவித்துள்ளார். 

அத்துடன், நீதிமன்றத் தீர்ப்பிற்கமைய 102 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால் வாக்குச் சீட்டுகளை மீண்டும் அச்சிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த நிலையில் அனைத்துத் தபால் வாக்குச் சீட்டுகளும் அச்சிடப்பட்டு, இன்றைய தினத்திற்குள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக அரச அச்சக மா அதிபர் பிரதீப் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

Share This Article