2005 ஜனாதிபதித் தேர்தலை புறக்கணித்தமையை வட பகுதி மக்கள் இப்போதாவது வருத்தத்துடன் நினைவுகூருவார்கள் – இவ்வாறு கூறியுள்ளார் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன்.
நேற்று யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கட்டடம் ஒன்றைத் திறந்து வைத்து உரையாற்றினார். இதன்போது 2005 ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணித்து தனது பயணத்துக்கு தடையாக இருந்தனர் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், சுமந்திரன் எம். பி. தனது உரையில், ‘2005 இல் உங்கள் (ரணில்) பயணத்துக்கு வடக்கு மக்கள் தடையாக இருந்திருக்கலாம். அதை வடபகுதி மக்கள் இப்போதாவது வருத்தத்துடன் நினைவு கூருவார்கள் என நினைக்கிறேன்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலம் முதல் வடக்கு மற்றும் கிழக்கின் அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டுள்ளார் – என்றும் கூறினார்.