சாதாரண தரப்பரீட்சையில் ஏற்பட்ட சிக்கல்! தீர்வு அறிவித்தது பரீட்சைகள் திணைக்களம்!

சாதாரண தரப்பரீட்சையில் ஏற்பட்ட சிக்கல்! தீர்வு அறிவித்தது பரீட்சைகள் திணைக்களம்!

Editor 1

இம்மாதம்  நடைபெற்ற 2023 கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் ஆங்கில மற்றும் விஞ்ஞான பாடங்களின் முறைகேடுகள்  தொடர்பில் எழுந்துள்ள கவலைகளுக்கு பரீட்சை திணைக்களம் தனது முடிவை அறிவித்துள்ளது.

அதன்படி, விஞ்ஞானப் பரீட்சை தாளில் உள்ள சில கேள்விகள் பாடத்திட்டத்திற்கு வெளியே இருப்பது கண்டறியப்பட்டது. விஞ்ஞான பரீட்சை குழப்பகரமான வினாக்களுக்கு மாத்திரம் கருணை புள்ளிகள் வழங்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஆங்கிலப் பரீட்சை வினாத்தாள்களை இரத்துச் செய்ய தேவை இல்லை எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

கடந்த வாரம் நடைபெற்ற கல்வி பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையின் ஆங்கில மொழி வினாத்தாள் பரீட்சையின் போது வட்ஸ்அப் ஊடாக பகிரப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

ஆங்கிலப் பாட வினாத்தாள் விடைகளை பெறுவதற்கு வட்ஸ் அப்  ஊடாக பகிரப்பட்டுள்ளது. இது  ஆங்கில மொழி வினாத்தாளின் இரகசியத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Share This Article