மன்னாரில் 160 ஏக்கர் காணி இந்திய நிறுவனத்திற்கு கனிய மணல் அகழ்வுக்காக விற்பனை!

மன்னாரில் 160 ஏக்கர் காணி இந்திய நிறுவனத்திற்கு கனிய மணல் அகழ்வுக்காக விற்பனை!

Editor 1

மன்னாரில் 160 ஏக்கர் காணி இந்திய நிறுவனம் ஒன்றுக்கு கனிய மணல் அகழ்வுக்காக விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் பல குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை உள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி, நடுக்குடா பாவிலான்பாட்டன் குடியிருப்பு பகுதியில் உள்ள காணியே இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மேலும்,

விற்பனை செய்யப்பட்ட காணியில் நூற்றுக்கணக்கான பனை மரங்கள் உள்ளன.

அவற்றை அழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் இதனை தடுத்து நிறுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தக் காணியை வாங்கிய நிறுவனம் தமது பூர்வீக காணிகளை அத்துமீறி பிடித்து வருவதாவும், பனை மரங்கள் அழிக்கப்படுவதால் தமது வாழ்வாதாரம் இழக்கப்படுவதாகவும் பாவிலான்பாட்டன் குடியிருப்பு மக்கள் தெரிவித்தனர்.

இதேநேரம், காணிகளை ஆக்கிரமித்து சுற்றுவேலி அமைக்கும் நடவடிக்கையை தடுக்க முயன்றவர்களை பொலிஸார் அச்சுறுத்துகின்றனர் என்றும் இது தொடர்பில் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த போதிலும்
பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மக்கள் மேலும் கூறினர்.

எனவே உரிய உயர் அதிகாரிகள் இவ்விடயத்தில் தலையிட்டு தமக்கு நீதி பெற்றுத்
தருமாறு மக்கள் கோரியுள்ளனர்.

Share This Article