இலங்கையில் பொறுப்புக்கூறல் உண்மை நல்லிணக்கம் நீதி போன்றவற்றிற்கு ஆதரவளிப்பேன் என இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக நியமிக்கப்படவுள்ள எலிசபெத் கே கோர்ஸ்ட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க செனெட்டின் வெளிவிவகார குழுவின் முன்னிலையில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக நியமிக்கப்பட்டால் இலங்கையில் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களை ஆதரவளிக்க எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்துள்ள அவர் இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்த அமெரிக்காவின் கரிசனைகளை பகிர்ந்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் துடிப்பான சிவில்சமூகம் காணப்படுகின்றது நான் நியமிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டால் இலங்கை அமெரிக்க சமூகங்கள் உட்பட மக்கள் மத்தியிலான தொடர்புகளை வலுப்படுத்த எண்ணியுள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களிற்கு ஆதரவளிக்க தயாராகவுள்ளேன் உண்மை நீதி நல்லிணக்கம் பொறுப்புக்கூறலிற்கு நான் ஆதரவளிப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க செனெட்டின் வெளிவிவகார குழு இலங்கையின் பொறுப்புகூறும் விவகாரங்களை கையாள்வதற்கான எலிசபெத் கே கோர்ஸ்டின்திறமை மாற்றுக்கருத்துக்களை இலங்கை அரசாங்கத்திடம் தெரிவிப்பதற்கான திறமை குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.
இதன்போதுஇலங்கை நாடாளுமன்றம் சமீபத்தில் நிறைவேற்றிய சட்டங்கள் இலங்கை மக்களிற்கான சுதந்திரங்களை மேலும் முன்னேற்றமாக்குவதற்கான அமெரிக்காவின் முயற்சிகள் குறித்து செனெட்டர் பென்கார்டின் சுட்டிக்காட்டினார்.
நான் தூதுவராக நியமிக்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்டால் அவர்கள் பின்பற்றவேண்டிய சர்வதேச தராதரத்திற்கு அனைவரையும் பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவேன் என எலிசபெத் கே கோர்ஸ்ட் தெரிவித்துள்ளார்.