முல்லைத்தீவில் கிராமிய வங்கியின் கூரை உடைத்து திருட்டு! சந்தேக நபர் சிக்கினார்!

முல்லைத்தீவில் கிராமிய வங்கியின் கூரை உடைத்து திருட்டு! சந்தேக நபர் சிக்கினார்!

Editor 1

முல்லைத்தீவு பகுதியில் வங்கியொன்றின் கூரை உடைக்கப்பட்டு திருடிய
சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்
தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருபவை வருமாறு,

முல்லைத்தீவு கூட்டுறவு கிராமிய வங்கி கடந்த 17 ஆம் திகதி கூரைப்பகுதி உடைக்கப்பட்டு அங்கிருந்த பெறுமதியான கைபேசி ஒன்றும், 52,000 ரூபாய் பணமும் திருடப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த வங்கி நிர்வாகத்தினரால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த கிராமிய கூட்டுறவு சங்கத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கருவியின் (சி.சி.ரிவி) உதவியுடன், திருடியதாக கூறப்படும் சந்தேகநபரின் முகநூலில் போடப்பட்ட தொலைபேசி பதிவையும் அடிப்படையாக கொண்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொக்கிளாய் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞன் ஆவார்.

சந்தேகநபரிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

அத்துடன்,

சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்தவும் கொக்கிளாய் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Share This Article