பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு தற்காலிக தடை கோருகிறது ஐரோ. ஒன்றியம்!

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு தற்காலிக தடை கோருகிறது ஐரோ. ஒன்றியம்!

Editor 1

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பயன்படுத்துவதற்கு
தற்காலிகமாக தடை விதிக்கும் யோசனையை முன்மொழிந்துள்ள
ஐரோப்பிய ஒன்றியம் இது குறித்து அரசாங்கத்தின் கருத்தைக் கோரியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த யோசனை குறித்து அரசாங்கம் இன்னமும் ஆராயவில்லை என தெரியவருகிறது இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் ஏனைய மேற்குலக
நாடுகளுடன் இணைந்து வேண்டுகோள் விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அரசாங்கத்துடனான அண்மைய பேச்சுகளின் போது பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை இடைநிறுத்திவைப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் ஆராய்ந்துள்ளனர்.

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகைக்காக ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்துள்ள நிபந்தனைகளில் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கமும் காணப்படுகின்றமை
குறிப்பிடத்தக்கது.

அநுரகுமார திஸநாயக்க அரசாங்கம் தொடர்ந்தும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி வருகின்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வேண்டு கோளை அரசாங்கம் ஏற்குமா என்ற கேள்விக்கு இது குறித்து இன்னமும் ஆராயவில்லை என நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனினும், பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு புதிய சட்டத்தை
அறிமுகப்படுத்துவோம் என அவர் கூறியுள்ளார்.

முன்னைய அரசாங்கத்தின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்தையா அரசாங்கம் புதிய சட்டமாக அறிவிக்கும் என்ற கேள்விக்கு நாங்கள் அதற்கு இன்னமும் பெயர் சூட்டவில்லை.

குழுவொன்று இது குறித்து ஆராய்கின்றது என அவர்
தெரிவித்துள்ளார்.

Share This Article