நீதிமன்றத் தீர்ப்புக்களால் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப முடியவில்லை என்கிறார் கல்வி அமைச்சர்!

நீதிமன்றத் தீர்ப்புக்களால் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப முடியவில்லை என்கிறார் கல்வி அமைச்சர்!

Editor 1

நீதிமன்ற தீர்ப்புகள் தடையாக அமையாவிட்டால் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க முடியும் என்று அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும்,

நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களிலுமிருந்து 23 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பில் நாம் விண்ணப்பங்கள் கோரியிருந்தோம்.

52 ஆயிரம் பேர் அதற்காக விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு எழுத்து மூல பரீட்சை நடத்தப்பட்டது.

ஆசிரியர் சேவை யாப்புக்கு இணங்க கடந்த வருடம் மார்ச் மாதம் நேர்முக தேர்வு நடத்த நாம் தயா ராக இருந்தோம் அனுமதி அட்டைகளையும் நாம் அனுப்பியிருந்தோம் அந்த நிலையிலேயே 33 பேர் நீதிமன்றுக்கு சென்று அதனை சவாலுக்கு உட்படுத்தினர்.

வயதெல்லையை 45 வரை நீடிக்குமாறு கோரி அவர்கள் அந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர். இன்னும் சிலர் நேர்முகத் தேர்வின்றி நியமனங்களை வழங்குமாறு கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.

இரு மனுக்களையும் கவனத்தில் கொண்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த வகையில் கடந்த வருடம் மார்ச் மாதத்திலிருந்து இன்று வரை அந்தத் தடை உத்தரவு அமுலில் உள்ளது.

அதனால் எமக்கு அதற்கான பரீட் சையை நடத்த முடியாத நிலையே தற்போதுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் அந்த வழக்கு உள்ள நிலையில் எமக்கு அது தொடர்பில் வேறு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது. இதனிடையே, ஆசிரியர் சேவையில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் பதவி விலகியோருக்கு பதிலாக ஆசிரியர் களை நியமிப்பதற்கு கல்வியமைச்சின் அனுமதியைப் பெற்று நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அந்த வகையில் 9 மாகாணங்களிலும் உரிய பரீட்சை நடத்தப்பட்டு நியமனக் கடிதங்கள் வழங்க ஆரம்பிக்கும் போது மேலும் ஒரு தரப்பினர் நீதிமன்றத்துக்கு சென்று மேற்படி தரப்பினருக்கு நியமனம் வழங்கும் வரை இந்த நியமனத்தை வழங்கக்கூடாது என நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

எனினும், மேன்முறையீட்டு நீதிமன் றத்தில் அதற்கான தடை நீக்கப்பட்டது. அந்தத் தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து பட்டதாரிகளுக்கு கட்டம் கட்டமாக நியமனம் வழங்கும் நடவடிக்கையை நாம் மேற்கொண்டோம்.

அந்த நிலையிலேயே நேற்றும் (நேற்றுமுன்தினம்) உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டி ருக்கிறது. அதன் முடிவை பொறுத்தே ஆசிரிய நியமனங்களை வழங்க முடியும் – என்றார்.

Share This Article