சுற்றுலா துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ளார் என்று அவருக்கு மிக நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. புதிய வீசா நடைமுறை தொடர்பில் அதிருப்தி தெரிவித்தே அவர் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
நாட்டின் வீசா வழங்கும் பொறுப்பை இந்திய நிறுவனமான வி. எவ். எஸ்.குளோபல் நிறுவனம் பெற்றுக் கொண்டது. வீசா கட்டணமான 50 டொலரில் 18.5 டொலர் நிறுவனத்துக்கு சென்றடைகிறது என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், இலவச வீசாவை அனுபவிக்கும் 7 நாடுகள் பாதிக்கப்படுகின்றன.
மிகவும் கீழ் மட்டத்துக்கு சென்ற சுற்றுலா துறையை மீண்டும் வளர்ச்சியை நோக்கிக் கொண்டு சென்றுள்ள இந்தத் தருணத்தில் வீசா தொடர்பான புதிய நடைமுறை பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தனது பதவி விலகல் குறித்து ஹரின் பெர்னாண்டோ அமைச்சரவைக்கு சுட்டிக்காட்டினார் என்றும் தெரிவிக்கப்பட்டது.