இலங்கை வரலாற்றில் முதன்முறையாக யாழ்ப்பாண தமிழர் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வடக்கு, வட மத்திய பிராந்திய சேவைகள் நிலையங்களின் மேலதிக பொது முகாமையாளராக பணியாற்றிய எந்திரி திரு பாலசிங்கம் பாரதிதாசன் என்பவரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், நேற்று திங்கட் கிழமை தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைமை பணிமனையில் தனது பதவியை பொறுப்பேற்றார்.
எந்திரி. தி. பாரதிதாசன் 1991 இல் இளங்கலை பொறியியல் (சிவில்) பட்டத்தை
மதுரை காமரஜர் பல்கலைக்கழகத்திலும் 1998 இல் கட்டுமான முகாமைத்துவத்தில் முதுமாணி பட்டத்தை மொறட்டுவை பல்கலைக்கழகத்திலும் 2008 இல் நீரியல் மற்றும் நீர் வளங்கள் கற்கைகளில் முதுமாணி பட்டத்தை நெதர்லாந்து பல்கலைக்கழகத்திலும் 2018 இல் வணிக நிர்வாகத்தில் முதுமாணி பட்டத்தை
இலங்கை ரஜரட்டை பல்கலைக்கழகத்திலும் பெற்றுள்ளார்.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையில் கடந்த 29 ஆண்டுகள் பணியாற்றியுள்ள பாரதிதாசன் யாழ்ப்பாணம் – சங்கு வேலியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.