கனடாவில் இன அழிப்பு நினைவுத்தூபி; தூதரை அழைத்து அதிருப்தி வெளியிட்டது இலங்கை அரசு!

கனடாவில் இன அழிப்பு நினைவுத்தூபி; தூதரை அழைத்து அதிருப்தி வெளியிட்டது இலங்கை அரசு!

Editor 1

கனடாவின் சமஷ்டி கட்டமைப்பின் கீழ் மாகாண மற்றும் உள்ளூராட்சி அரசாங்கங்கள் மத்திய அரசாங்கத்திலிருந்து வேறுபட்டு சுதந்திரமாக இயங்கமுடியும். அவற்றுக்கென தனி நிர்வாக அதிகாரங்கள் உள்ளன என்று கொழும்பிலுள்ள கனடிய தூதரகம் இலங்கை அரசாங்கத்துக்குத் தெரிவித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற தமிழின அழிப்பை நினைவுகூரும் வகையிலான நினைவுத் தூபி ஒன்று கனடாவின் பிரம்டன் நகரில் அமைக்கப்படுகின்றது.

இது தொடர்பில் அரசாங்கம் இலங்கையிலுள்ள கனடா தூதுவரை அழைத்து அது தொடர்பில் தனது அதிருப்தியை தெரிவித்திருந்ததாகக் கூறப்படுகின்றது.

கனடிய தூதுவர் எரிக் வோல்ஷூக்கும், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜயவர்தனவுக்கும் இடையில் இந்த சந்திப்பு நடைபெற்ற கொழும்பிலுள்ள கனடிய தூதரகம் மின்னஞ்சல் மூலம் தமக்கு உறுதி செய்ததாக தமிழ் கார்டியன் தெரிவித்துள்ளது.

அத்துடன், கனடாவின் சமஷ்டி கட்டமைப்பின் கீழ் மாகாண மற்றும் உள்ளூராட்சி அரசாங்கங்கள் மத்திய அரசாங்கத்திலிருந்து வேறுபட்டு சுதந்திரமாக இயங்கமுடியும். அவற்றுக்கென தனி நிர்வாக அதிகாரங்கள் உள்ளன என்றும் கனடிய தூதரகம் தெரிவித்துள்ளது.

Share This Article